ஒரு பாடல் 9 கெட்டப்

திங்கள், 1 நவம்பர் 2010 (14:13 IST)
ஸ்டூடியோ ஸ்க்ரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் படம் சிறுத்தை. கார்த்தி, தமன்னா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கில் தயாரான விக்ரமார்க்குடு படத்தின் ரீமேக் ஆகும்.

கார்த்தி முத‌ல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமும் இதுவாகும். படத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுத்து வருகிறாராம் இயக்குநர் சிவா.

பாட்ஷா படத்தில் ரஜினி ஒரு பாடல் காட்சியில் எப்படி பல கெட்டப் போட்டாரோ அதுபோல இதில் கார்த்தி ஒரு பாடலுக்காக 9 கெட்டப் போட்டிருக்கிறார்.

டிசம்பர் கடைசி வரை காத்திருந்தால் அந்த 9 கெட்டப்பையும் பார்த்துவிடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்