ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (10:30 IST)
ஐந்து ஐந்து ஐந்து படத்துக்குப் பிறகு பரத் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சாலை என்ற படத்தில் நடிக்கயிருப்பதாக சில வாரங்கள் முன்பு கூறியிருந்தோம். தவறு. சாலை இல்லை சிகாமணி. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி.
 
படிக்காத இளைஞனுக்கும், படித்த பெண்ணிற்கும் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு இருவருக்குள்ளும் நடக்கும் முட்டல் மோதல்களை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் இந்த சித்த வைத்திய சிகாமணி.
 
இதில் சித்த வைத்திய தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவராக வருகிறார் பரத். அவருக்கு ஜோடியாக கல்லூரி மாணவியாக நடிக்கும் நந்திதா. நகைச்சுவையை மையப்படுத்தி தயாராகும் இந்தப் படத்தை பாலசந்தரின் கவிதாலயா தயாரிக்கிறது. எஸ்.ஜி.ரவிச்சந்திரன் படத்தை இயக்கி வருகிறார்.
 
பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். நகைச்சுவையை மையப்படுத்திய படம் என்பதால் காமெடி நடிகர்கள் மட்டும் 21 பேர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்