எழில் இயக்கத்தில் விமல்

திங்கள், 18 ஜூன் 2012 (12:05 IST)
FILE
மனம் கொத்திப் பறவைக்குப் பிறகு இயக்குனர் எழிலின் திரைவானம் தெளிந்திருக்கிறது. அடுத்தப் படத்தை உடனடியாகத் தொடங்குகிறார். ஹீரோ விமல்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு யாரை ஹீரோயினாகப் போடுவது என்று யோசிப்பதற்குள் ஓவியாவின் பெயரை பரின்ந்துரைத்திருக்கிறார் விமல்.

கலகலப்புலதானே சேர்ந்து நடிச்சீங்க அதுக்குள்ள இன்னொரு படமா என்று எழில் இழுத்தாலும் ஓவியா விஷயத்தில் ஸ்டெடியாக இருக்கிறாராம் விமல்.

ஓவியாவுடன் நடித்த களவாணி ஹிட். கலகலப்பும் கலெக்ஷன் அள்ளுது. சென்டிமெண்டா ஓவியாதான் செட்டாகும் என்று தனது முடிவுக்கு சென்டிமெண்டை துணைக்கழைத்திருக்கிறார்.

கடைசியாக என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்