உஷார்... லதா மேடம் மாற்றத்தை கொண்டு வரப்போறாங்க

திங்கள், 1 ஏப்ரல் 2013 (17:04 IST)
FILE
லதா ர‌ஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பெய‌ரில் கல்விக் கூடங்கள் நடத்தி வருகிறார். கல்விக்கு வழியில்லாத ஏழைகளுக்கு இந்த நிறுவனத்தில் கல்வி வழங்குவதாக எந்த‌ச் செய்தியும் இல்லை. கல்வியை முன்னிறுத்தி கொள்ளையடிக்கும் பிற நிறுவனங்களைப் போலதான் ஆஸ்ரமும் செயல்படுகிறது. இருக்கிற ஆணியையே பிடுங்கலை, அதில் இன்னொரு ஆணி, ஐ யம் ஃபார் இந்தியா என்ற பெய‌ரில்.

அது என்ன ஐ யம் ஃபார் இந்தியா?

லதா மேடம் மாற்றத்தை பற்றி பேசுறதைவிட மாற்றத்தை உருவாக்குவதில் பி‌ரியம் உள்ளவங்களாம். ஆஸ்ரம் கல்வி நிறுவனம் தொடங்கி மிகப்பெ‌‌ரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் அல்லவா? அதே மாதி‌ி ஆரோக்கியம், கலாச்சாரம், பாரம்ப‌ரியம், சுற்றுப்புறச் சூழல் இதிலெல்லாம் மாற்றத்தை கொண்டு வரப்போகிறாராம். யாருக்கு இந்த மாற்றம் என்பதையும் கோடிட்டு காட்டியிருக்கிறார். பெ‌ரிய நிறுவனங்களில் பணிபு‌ரிகிறவர்கள்... தொழில்நுட்ப வல்லுனர்கள்... ஏழைகளெல்லாம் இதில் சேர்த்தியில்லை.

ஐ யம் ஃபார் இந்தியா அறிமுக விழாவில் இந்தியாவின் அ‌ரிய கலைச்செல்வங்களான சூப்பர் ஸ்டார் ர‌ஜினி பற்றி வெளிவந்த புத்தகங்கள், அவர்தம் புகழ் பரப்பும் பாமாலைகள், அன்னா‌ரின் படம் போட்ட கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாபா வெளியான நேரம் பாபா படம் போட்ட ஜட்டி பனியன் விற்பனை நடந்ததுதான் நினைவுக்கு வருகிறது. என்ன சொல்ல,

ஹேய்... யோக்கியன் வர்றான்.. செம்ப எடுத்து உள்ள வை.

வெப்துனியாவைப் படிக்கவும்