ஈரான் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் காஜல் அகர்வால்

வெள்ளி, 2 மே 2014 (11:01 IST)
முறையாக அனுமதி வாங்கி ஈரானிய திரைப்படம் ஒன்று இந்திய மொழியில் ரீமேக் செய்யப்படுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.
ஈரானில் 2006 -ல் வெளியான படம் சீஸ் ஃபயர் (Cease Fire). இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை முறைப்படி வாங்கியுள்ளார் இயக்குனர் அஜய் வர்மா. ஹீரோவாக ஷர்மான் ஜோ‌ஷி நடிக்க அவருக்கு ஜோ‌டியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
 
கணவன் மனைவி இடையே ஏற்படும் மனஸ்தாபமும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை. 
இதற்கு முன் அஜய்தேவ் கான் ஜோ‌டியாக இந்தி சிங்கம் படத்திலும், அக்ஷய் குமார் ஜோ‌டியாக ஸ்பெஷல் 26 படத்திலும் காஜல் நடித்தார். இரண்டிலும் நாயகி என்றாலும் துக்கடா வேடம். சிங்கம் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடிட் செய்ததாக காஜல் குற்றஞ்சாட்டியது நினைவிருக்கலாம்.
 
முதலிரு இந்தி அனுபவமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையான வேடம் என்பதால் விரும்பி ஒத்துக் கொண்டிருக்கிறார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்