இவர்தான் பாலாவின் தாரை தப்பட்டை வில்லன்

புதன், 30 ஜூலை 2014 (11:30 IST)
பாலா படத்தின் வில்லன்கள் உலகின் ஒட்டு மொத்த முரட்டுத்தனத்தின் வடிவம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு குரூரத்தை வெளிப்படுத்துகிறவர்கள். பலமிக்கவர்கள்.
தாரை தப்பட்டையிலும் அப்படியொரு வில்லனை கண்டு பிடித்துள்ளார் பாலா. அவர் வேறு யாருமில்லை ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸின் எம்டி ஆர்.கே.சுரேஷ்.
தமிழின் முக்கிய படத்தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸின் எம்டியான சுரேஷ் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர் அவரின் ஆம்ஸை பார்த்தாலே அதனை புரிந்து கொள்ளலாம். இவர்தான் தாரை தப்பட்டையில் சசிகுமாருடன் மோதப் போகிறார். 
 
தாரை தப்பட்டை வெளிவந்தால் தமிழுக்கு ஒரு பவர்ஃபுல் வில்லன் கியாரண்டி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்