இளையராஜா இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்

புதன், 16 ஏப்ரல் 2014 (11:38 IST)
இந்திப் படத்துக்காக இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன். 

இளையராஜா இசையில் தேவர்மகன் படத்துக்காக போற்றிப்பாடடி பெண்ணே பாடலை தனது மழலைக் குரலில் ஸ்ருதி ஏற்கனவே பாடியுள்ளார். அப்போது அவர் குழந்தை. 
 
இந்தியில் பால்கி தனது 3-வது படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதியின் தங்கை அக்ஷராஹாசன்தான் அப்படத்தில் நாயகி. தனுஷ் நாயகன். அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் வருகிறார். முதலிரு படங்கள் - சீனி கம், பா - போலவே இந்தப் படத்திலும் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை இளையராஜா.
 
இந்தப் படத்துக்காக ஸ்ருதி ஒரு பாடலை இளையராஜா இசையில் பாடினார். திரையில் ஸ்ருதியின் குரலுக்கு வாயசைக்கப் போகிறவர் அவரது தங்கை அக்ஷராஹாசன்.
 
பால்கி தனது படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்