இளையராஜாவின் இனிப்பு செய்தி

செவ்வாய், 30 அக்டோபர் 2012 (15:48 IST)
FILE
இளையராஜா இதற்கு முன் ரசிகர்கள் விஷயத்தில் எப்படியோ? எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில் ரசிகனுக்காக எதையும் செய்வேன் என்று துணிந்து இறங்கியிருக்கிறார்.

கனடாவில் நவ.3 ஆம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நவம்பர் மாவீரர் தினம் வருகிற மாதம் என்பதால் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் நவம்பர் மாதத்தில் வைத்துக் கொள்வதில்லை. இது ஈழத்தில். தமிழ்நாட்டில் எப்போதும் போல ஆர்ப்பாட்டங்கள் தங்கு தடையில்லாமல் நடக்கும். படங்களும் கண்டபடி வெளியாகும், தீபாவளி மாதமல்லவா.

இந்த வருடம் சிலர் திடீரென்று நவம்பர் மாதத்தில் ஆரும் பேசப்படாது ஆரும் பாடக் கூடாது என்று நாட்டாமை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக கனடாவில் நவ.3 ஆம் தேதி இளையராஜா நடத்தயிருக்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெ‌ரிவித்தனர். சிறு குழுக்களின் எதிர்ப்புதான் இது.

இளையராஜாவிடம் இதுபோன்ற சென்டிமெண்ட்கள் எடுபடாது. இனத்துக்குப் பதில் ஆன்மீகத்தின் பெய‌ரில் எதிர்ப்பு தெ‌ரிவித்திருந்தாலாவது செவி கொடுத்திருப்பார். மானுட ஜந்துவான தமிழனுக்காக தெய்வீக இசையை நிறுத்த முடியுமா? ஒரேயொரு ரசிகன் வந்தால்கூட கனடாவில் ஐந்து மணி நேரம் வாசிப்பேன் என்று சூளுரைத்து சிங்கம் பிளைட் ஏறியிருக்கிறதாம். அதனால் நவ.3 கச்சே‌ரி களைகட்டுவது திண்ணம்.

யாராவது எதிர்த்தால்தான் சிலருக்கு ரசிகர்களின் அருமை தெ‌ரிய வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்