இறுதிகட்ட படப்பிடிப்பில் வேலையில்லா பட்டதாரி

புதன், 30 ஏப்ரல் 2014 (11:39 IST)
தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை (ஏப்ரல் 30) தொடங்குகிறது. 

 
தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி வருகிறார். வேல்ராஜுக்கு இயக்குனராக இது முதல் படம். ஹீரோயின் அமலா பால். அனிருத் இசை.
 
சமுத்திரக்கனி தனுஷின் தந்தையாக நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குவதாக தனுஷ் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும், பல பிரபலங்கள் இந்த ஷெட்யூல்டில் கலந்து கொள்ளயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
 
மரியான், நையாண்டி என அடுத்தடுத்த தோல்விகள் கண்ட தனுஷுக்கு வேலையில்லா பட்டதாரி வெற்றி பெற்றேயாக வேண்டிய படம். கதை, காட்சிகள் தொடங்கி ஷாட் வைப்பதுவரையில் இன்வால்வாகி படத்தை உருவாக்கி வருகிறார் தனுஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்