இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி?

திங்கள், 8 ஆகஸ்ட் 2011 (17:38 IST)
இ‌ந்தியாவை தவிர்த்து வேறு நாடுகளில் இரட்டை வேடத்தில் பெரும்பாலும் யாரும் நடிப்பதில்லை. இந்தியாவில் எல்லாப் புகழும் எங்களுக்கே என்ற அடிப்படையில் இரண்டு முக்கியமான வேடங்கள் இருந்தால் இரண்டிலும் ஒரே நடிகர் நடிப்பதுண்டு.

நிற்க. விக்ரம் நடிக்கும் ராஜபாட்டையில் அவருக்கு இரண்டு வேடங்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதனை விக்ரம் மற்றும் படத்தின் இயக்குனர் சுசீந்திரன் மறுத்தனர்.

ஆதிபகவான் படத்தில் ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிப்பதாக புதிய தகவல். ஆதிபகவான் அமீர் இயக்கும் படம். ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்துள்ளனர். பாங்காங்கில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஜெயம் ரவி இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதை அமீரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹீரோ, வில்லனா இல்லை வேறு வேடமா என்பது மட்டும் ரகசியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்