இயக்குனராகும் நடிகைகள்

புதன், 1 ஏப்ரல் 2009 (14:06 IST)
சினிமா போரடிக்கும் போது சின்னத்திரைக்கு ஷிப்ட் ஆகும் நடிகைகளே இங்கு அதிகம். தப்பித் தவறி படம் இயக்க வ‌ரிந்து கட்டுகிறவர்களும் உண்டு.

ரேவதி இதில் வெற்றி பெற்றவர். சுஹாசினி ஒரே படத்துடன் ‌ரிட்டையர்ட் ஆனவர். ரோகிணியும், ரஞ்சிதாவும் முயற்சி திருவினையாக்கும் என இப்போதும் இயக்குனராக முயன்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வ‌ரிசையில் இன்னொருவர், நடிகை சாயாசிங்.

வல்லமைதாராயோ படத்தில் நடித்த பிறகு இவரது இயக்குனர் ஆசை கொழுந்துவிட தொடங்கியது. காந்தி பஜார் என்ற ஸ்கி‌ரிப்டை எழுதி தயாராக வைத்திருக்கிறார். பணம் போட ஆள் கிடைத்தால் கிளாப் போர்டுடன் கிளம்பி விடுவார்.

சத்தம் இல்லாமல் இன்னொரு நடிகை இயக்குனராகியிருக்கிறார். அவர் கமல்ஹாசனால் நளதமயந்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட கீது மோகன்தாஸ். கேக்குணுண்டோ - அப்படின்னா கேட்கிறீர்களா என்று அர்த்தம் - என்ற படத்தை மலையாளத்தை இயக்கியிருக்கிறார். இது முழுநீள திரைப்படம் அல்ல. அரைமணிநேரம் ஓடும் குறும்படம். தொடர்ந்து படம் இயக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெ‌ரிவித்திருக்கிறார்.

பெண் இயக்குனர்கள் மிகக் குறைவாக இருக்கும் இந்திய சினிமாவில் நடிகைகள் இயக்குனராவது வரவேற்க வேண்டிய நல்ல விஷயம்.

வெப்துனியாவைப் படிக்கவும்