இந்திப் படம் ஸ்பெஷல் 26 -இன் உரிமையை வாங்கிய தியாகராஜன்

திங்கள், 22 செப்டம்பர் 2014 (18:28 IST)
அக்ஷய் குமாரின் வழக்கமான கமர்ஷியல் சினிமாவிலிருந்து மாறுபட்டு வெளிவந்த படம், ஸ்பெஷல் 26. கமலின் உன்னை போல் ஒருவனின் ஒரிஜினலான ஏ வெட்னெஸ்ட்டே படத்தை இயக்கிய நீரஜ் பாண்டேயின் இரண்டாவது படம். அறுபது கோடிக்கு மேல் வசூலித்த இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளார்.
 
சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மும்பையில் ஒரு கும்பல் நகைக்கடையை கொள்ளையடித்தது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ஸ்பெஷல் 26. அக்ஷய் குமாருடன் அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய், காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
 
இதன் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளார். அவரது மகன் பிரசாந்த் அக்ஷய் குமார் நடித்த வேடத்தை தமிழில் செய்கிறார். தமிழ் ரீமேக்கின் பெயர் மற்றும் இயக்குனர் முடிவாகவில்லை.
 
ஏற்கனவே இந்திப் படம் குயினின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட ரீமேக் உரிமைகளை தியாகராஜன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்