இது ஒரு மருத்துவ கதை

வெள்ளி, 23 மே 2014 (13:56 IST)
இன்று போல மருத்துவ முன்னேற்றம் ஏற்படாத கால கட்டத்தில் மனித சிகிச்சை முறைகள் எப்படி இருந்தது..? ரண சிகிச்சை என்ற பெயரில் அப்போதைய நோயாளிகள் என்னென்ன சிரமங்களை அனுபவித்தார்கள். என்பதை புதிய கோணத்தில் சொல்ல வெளிவர இருக்கும் படம்தான் பண்டுவம். 
எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் படக் குழுவினர். தமிழ் சினிமாவுக்கு இது முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும். கூடவே, ஒரு அழகான கல்லூரி காதலையும் இதில் சொல்லி இருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குனர் கீட்டன். 
 
வித்தியாசமான பெயரை கொண்ட இவர், நடிகர் வாகை சந்திரசேகரின் அண்ணன் மகனாவார். இதில், புதுமுக நாயகனாக சித்தேஷும், நாயகியாக சுவாசிகாவும் நடிக்கின்றனர். மேலும், ஆண்டனி, கார்த்திக், பகதூர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: முத்ரா, இசை: நீரோ. படத்தை ஜி,எஸ். டெவலெப்பர் நிறுவனத்தின் சார்பாக பி. குணசேகரன் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்