இந்தியில் வெளியான அமீர் படத்தின் தழுவல்தான் ஆள். விதார்த் நடித்துள்ள இப்படம் மத பின்னணி கொண்டது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் விதார்த்தை ஒரு மதவாத கும்பல் மிரட்டி சில தவறான காரியங்களை செய்யச் சொல்கிறது. தாயும், தங்கையும் தீவிரவாதிகளின் கஸ்டடியில் இருப்பதால் சொல்வதை செய்ய வேண்டிய நிலை விதார்த்துக்கு. அவர் அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படம்.