ஆர்கே விரும்பும் நடிகை

திங்கள், 26 அக்டோபர் 2009 (13:58 IST)
முதலில் வில்லன் பிறகு ஆன்ட்டி ஹீரோ அடுத்து ஹீரோ... ஆர்கேயின் கே‌ரியர் கிராஃப் ரொம்ப ஸ்ட்ராங்க்.

அழகர்மலையின் வெற்றி பல இயக்குனர்களை ஆர்கேயின் பக்கம் இழுத்திருக்கிறது. அடுத்ததாக ஒரு ரவுடி கதையில் நடிக்க தீர்மானித்திருக்கிறாராம் இந்த முன்னாள் பிசினஸ்மேன். ரவுடி கதை என்றால், முதலில் ரவுடியாக இருப்பவன் திருந்தி, தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு இனிமா கொடுக்கும் கதை.

ஆ‌க்சன் ரூட்டில் சென்றால் மட்டுமே வேகமாக முன்னேற முடியும் என்ற ூத்திரம் ஆர்கே-க்கும் தெ‌ரிந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க பானுவிடமே மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறார் ஆர்கே. அழகர்மலையிலும் இவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

பானுவின் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி வைத்த படம் அழகர்மலை என்பதால் உடனே கால்ஷீட் தருவார் என்று ஆர்கே எதிர்பார்த்தார். ஆனால், நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஆர்கே-யின் வாய்ப்பை உதறியிருக்கிறார் பானு. ஆனாலும், ஆர்கே-யின் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்