அஜீத் - கௌதம் இணையும் படத்தில் வில்லன்களாக அரவிந்தசாமி, அருண் விஜய் நடிக்கிறார்கள் என செய்தி வெளியிட்டு, அரவிந்தசாமி நான்சென்ஸ்... அடிப்படை இல்லாத செய்தி என்று திட்டியது நினைவிருக்கலாம். ஆனால் அது முழுக்க தவறான செய்தியில்லை. அரை உண்மை அந்த செய்தியில் இருக்கவே செய்கிறது.
அரவிந்தசாமி படத்தில் நடிக்கவில்லையே தவிர அருண் விஜய் நடிக்கிறார்.
ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை எழுதியிருக்கும் இப்படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா நடிக்கிறார். மிகப்பிரமாண்டமாக ஸ்ரீ சத்ய சாய் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் இசை.
இந்த பெருமைக்குரிய படத்தில் நானும் நடிக்கிறேன் என தற்போது அருண் விஜய் கூறியுள்ளார். அவருடன் ஆதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வீரம் படத்தில் தம்பிகளாக விதார்த், பாலா நடித்தது போலில்லாமல் இவர்கள் அஜீத்துக்கு எதிரணியில் கலக்கயிருக்கிறார்கள்.