ஆபாச வசனங்கள், காட்சிகள் - தணிக்கைக் குழு கறார் உத்தரவு

வியாழன், 31 ஜூலை 2014 (20:10 IST)
படத்தில் ஏதாவது ஆபாச வசனங்கள், காட்சிகள் இருந்தால் அந்த வசனத்தை மட்டும் மியூட் செய்வார்கள். காட்சிகளை ப்ளர் செய்வார்கள். உதாரணமாக மாராப்பு இல்லாமல் ஆடும் போது அந்த நடிகையின் நெஞ்சுக்கு மேலே ஏதாவது டிஸைனை ஓடவிடுவார்கள். இது அந்தக் காட்சியின் உண்மையான ஆபாசத்தைவிட கூடுதல் ஆபாசமாக தெரியும்.
 
இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு ஒரேயடியாக ஆப்பு வைத்துள்ளது மத்திய தணிக்கைக் குழு. இது குறித்து பேசிய மத்திய தணிக்கைக் குழு சிஇஓ ராகேஷ் குமார்...
படங்களில் இடம்பெறும் ஆபாச வசனங்களை நீக்குவதற்கு பதிலாக அந்த இடத்தில் சத்தத்தைக் குறைப்பது, வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளை மறைக்க, சம்பந்தப்பட்ட இடத்தை மட்டும் தெளிவற்றதாகக் காண்பிப்பது என இதுவரை செய்துவந்தோம். 
 
அப்படி செய்வதால், ஒரு பயனும் இல்லை. சம்பந்தப்பட்ட வசனங்களையோ காட்சிகளையோ பார்வையாளர்கள் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். இனி அந்தக் காட்சிகளையே நீக்க வேண்டும் என்று கூற உள்ளோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்க இருக்கிறோம். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
ஆக, வசனம் மியூட் செய்யப்பட்டாலும் பரவாயில்லை இரட்டை அர்த்த வசனம் வைத்தே தீருவோம் என்பவர்கள் இனியும் தங்களின் அழுகுணி ஆட்டத்தை தொடர வழியில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்