அம்மா வழியில் படம் இயக்க தயாராகும் கொங்கனா சென்

புதன், 27 ஆகஸ்ட் 2014 (18:13 IST)
அம்மா அபர்ணா சென்னின் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் தெரிய வந்தவர் கொங்கனா சென். பாலிவுட் நடிகைகளுக்குரிய எந்த சாமுத்ரிகா லட்சணமும் இல்லாத இவர் தனது ஹேம்லி லுக் மற்றும் நடிப்பால் இன்று வரை பாலிவுட் சினிமா விரும்பும் நடிகையாக இருந்து வருகிறார்.
ஆனால் சமீபமாக கொங்கனாவை இந்தி சினிமாவில் பார்க்க முடியவில்லை.
 
வங்கமொழி சினிமா ஒன்றில் பிஸியாக இருப்பதாகவும், மேக்னா குல்சரின் அடுத்தப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கொங்கனா தெரிவித்துள்ளார். மேலும், சினிமாவுக்கான ஸ்கிரிப்ட் ஒன்றையும் எழுதி வருகிறார்.
 
விரைவில் படம் இயக்குவேன் என்றும் அறிவித்துள்ளார். அதேநேரம் நடிப்பையும் தொடர முடிவு செய்துள்ளார் கொங்கனா சென்.

வெப்துனியாவைப் படிக்கவும்