அமெ‌ரிக்காவில் கலக்கும் ஈகா

சனி, 21 ஜூலை 2012 (19:33 IST)
FILE
எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஈகா தமிழில் நான் ஈ என்ற பெய‌ரில் வெளியாகி நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓபனிங்கைவிட இப்போதுதான் அதிகமாக வசூலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஈகாவும், நான் ஈ-யும் யுஎஸ்ஸில் இங்கு வெளியான அதேநாள் வெளியானது.

இதில் ஈகாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் மழை கொட்டுகிறது. இரண்டாவது வார இறுதியில் மட்டும் 2,53,334 அமெ‌ரிக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. 42 திரையிடல்களில் இந்த வசூலை ஈகா பெற்றிருக்கிறது. இதுவரை யுஎஸ்ஸில் ஈகாவின் வசூல் 9,13,046 அமெ‌ரிக்கன் டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 4.99 கோடிகள்.

நான் ஈ அதாவது ஈகாவின் தமிழ் பதிப்புக்கு அவ்வளவு வரவேற்பில்லை. இதுவரை யுஎஸ்ஸில் 7.8 லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது. தென்னிந்திய படம் ஒன்று ஐந்து கோடிகள் வசூலித்திருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

எந்திரன் வசூல் எவ்ளோப்பா?

வெப்துனியாவைப் படிக்கவும்