அன்னை தெரசா - காப்பாற்ற வந்த காங்கிரஸ்காரர்

சனி, 3 நவம்பர் 2012 (20:26 IST)
தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதில் காங்கிரஸார் கெட்டிக்காரர்கள். இந்த விஷயத்தில் அவர்களை அடிக்க ஆளே இல்லை.

அன்னை தெரசா இண்டர்நேஷனல் நிறுவனம் அசைவம் என்ற படத்தை தயா‌ரித்துள்ளது. ஏற்கனவே அசைவத்தின் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் புகைப்படத்தைவிட அமோகம். இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செயலாளர் ‌ஜி.கே.தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர் அன்னை தெரசா பேரவை தலைவராகவும் இருக்கிறார்.

அன்னை தெரசா என்ற பெய‌ரில் அசைவம் என்ற ஆபாச படத்தை எடுத்து அன்னை தெரசாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருப்பதாக தாஸ் தனது அறிக்கையில் சினந்திருக்கிறார். அன்னை தெரசாவின் பெயரை களங்கப்படுத்தியதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை மூலம் ஆவேச வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

காந்தி படம் போட்ட கரன்சியை கொடுத்து டாஸ்மாக்கில் சாராயம் வாங்கிக் குடிக்கிறார்கள். இது காந்தியை அவமதிப்பது, அதனால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று இந்த காங்கிரஸ்காரருக்கு அறிக்கைவிட‌த் தெ‌ரியவில்லை. அன்னை தெரசாவை காக்க அவதாரம் எடுத்திருக்கிறார்.

படு காமெடியா இருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்