அஞ்சான் விமர்சனத்தால் ஆர்ஜே பாலாஜிக்கு மிரட்டல்

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:29 IST)
பிக் எஃப்.எம்.மில் ஆர்ஜேவாக இருக்கும் பாலாஜி 120 ரூபாய் நிகழ்ச்சியில் படங்களை விமர்சனம் செய்து வருகிறார்.
அஞ்சான் திரைப்படத்தை பெயர் குறிப்பிடாமல் அவர் நக்கலும் நய்யாண்டியுமாக செய்த விமர்சனத்துக்கு நல்ல வரவேற்பு. அதேநேரம் அஞ்சான் தரப்பிலிருந்து பாலாஜிக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. யுடிவி தனஞ்செயன் தரப்பும் பாலாஜியை கடுமையாக சாடியதாக தெரிகிறது. 
 
இதனைத் தொடர்ந்து 120 ரூபாய் நிகழ்ச்சியையே ரத்து செய்வதாக அவர் அறிவித்தார். நான் வேலை முடித்து சந்தோஷமாக வீட்டிற்கு செல்ல நினைப்பவன். சிலருக்கு சகிப்புதன்மை வரும்வரை 120 ரூபாய் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அவர் கூறினார்.
 
பாலாஜியின் விமர்சனத்துக்கு வெளிப்படையாக சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார். நீ யாரை பற்றியும் கவலைப்படமால் உனக்கு சரி என்று தோன்றியதை தொடர்ந்து செய், யாருக்காவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே என பாலாஜிக்கு சிம்பு தைரியம் அளித்துள்ளார்.
 
அஞ்சானைவிட படத்தைப் பற்றிய ரசிகர்களின், பிரபலங்களின் நய்யாண்டி கமெண்ட்தான் இப்போது இணையத்தில் பிரபலமாக இருக்கிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்