அஞ்சான் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய், 24 ஜூன் 2014 (15:59 IST)
லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் எப்போது வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், யுடிவி யும் இணைந்து அஞ்சானை தயாரித்து வருகின்றன. சென்ற வாரம் மும்பையில் அஞ்சானின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்தது. 
சூர்யா, சமந்தா நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை ஜூலை 5 வெளியிடுவதாக லிங்குசாமி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார். படம் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. பட வெளியீட்டு தேதியை ஏற்கனவே தயாரிப்பு தரப்பு உறுதி செய்திருந்தது.
 
மும்பையை களமாகக் கொண்டு தயாராகியிருக்கும் தாதா கதையிது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்