அஞ்சானுக்கு யு சான்றிதழ்

வியாழன், 31 ஜூலை 2014 (18:50 IST)
ஆகஸ்ட் 15 வெளியாகவிருக்கும் அஞ்சானுக்கு சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.
தணிக்கைக்குழு உறுப்பினர் பற்றாக்குறை காரணமாக தணிக்கைக்கு விண்ணப்பித்த பல படங்கள் தணிக்கை செய்யப்படாமல் காத்திருக்கின்றன. விண்ணப்பித்த சீனியாரிட்டிபடி மட்டுமே தணிக்கைக்குழுவினர் படங்களைப் பார்த்து சான்றிதழ் தர வேண்டும்.
 
இந்நிலையில் அஞ்சான் படம் தணிக்கைக்கு விண்ணப்பித்த உடனேயே அதனைப் பார்க்க சம்மதித்தனர் தணிக்கைக்குழு உறுப்பினர்கள். இது சர்ச்சையை கிளப்பியது. என்றாலும் சீனியாரிட்டி எதுவும் பார்க்காமல் அஞ்சான் படத்தை முதலில் பார்த்த தணிக்கைக்குழுவினர் எந்த காட்சியையும், வசனத்தையும் எடிட் செய்யாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் வழங்கினர்.
 
மும்பையை களமாகக் கொண்ட அஞ்சானை லிங்குசாமி இயக்கியுள்ளார். அவரது திருப்பதி பிரதர்ஸும், யுடிவி யும் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்