ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீசத்ய சாய் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க, அஜீத், அனுஷ்கா நடிக்கின்றனர். வில்லன்களாக அரவிந்தசாமி, அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி அரவிந்த்சாமி அதனை நான்சென்ஸ் என்று மறுத்தார். அதேநேரம் அருண் விஜய் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். அவருடன் ஆதியும் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் அஜீத்தின் எதிர்தரப்பாக இருப்பார்கள் என தெரிகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா தவிர்த்து மேலுமொரு நாயகி வேடம் உள்ளது என கூறப்பட்டது. இந்த வேடத்துக்கு எமி, த்ரிஷா இருவரும் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் இருவருமே நடிக்கவில்லை. குறிப்பிட்ட வேடம் வில்லத்தனம் நிரம்பியது, அதனால்தான் இருவரும் நடிக்க மறுத்தனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.