வீரம் திரையரங்க கொண்டாட்டம்

வெள்ளி, 10 ஜனவரி 2014 (16:58 IST)
எஸ்.ஏ.சந்திரசேகரன் போன்ற அரசியல் தொலைநோக்கு பார்வைகொண்டவpன் வழிகாட்டுதல் இல்லாததால் அஜித் ரசிகர்கள் யானை, குதிரை, கிடா வெட்டு என்று இன்னும் போகவில்லை. அதற்காக கொண்டாட்டத்துக்கு எந்த குறையும் இல்லை.
FILE

ரசிகப்பட்டாளங்களின் பாலபிஷேகம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல் போன்ற சமூக கடமைகளை அஜித் ரசிகர்கள் வெறியுடன் செய்ததை சென்னை முழுவதும் காண முடிந்தது. உதயத்தில் ஜில்லாவும் வெளியானதால் போட்டி சற்று கடினம். அவர்கள் யானை, குதிரை என்று போட்டுத் தாக்க அஜித் ரசிகர்கள் அதிர்ந்துதான் போயினர்.
FILE

ஆனால் அதிர்ஷ்டவசமாக அஜித்தே காரில் உதயம் திரையரங்குக்கு வர ஆர்ப்பரித்தது ரசிகப் பட்டாளம். அஜித் வந்த காரை சூழ்ந்து கொண்டு அவர்கள் கோஷங்கள் போட, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட போலீஸ்காரர்கள் லத்தியை சுழற்ற வேண்டி வந்தது.

FILE
படம் பார்க்க வந்தவர்கள் லத்தி அடி வாங்கி சிதறி ஓடிய பிறகு அஜித் சாவகாசமாக வெளியே வந்தார். அடி வாங்கியவர்களுக்கும் கோஷம் போட்டவர்களுக்கும் ஐயே என்றாகிவிட்டது. வந்தது அஜித் அல்ல, அஜித் போன்றே தாடி மீசை வைத்திருந்த அஜித் ரசிகர். சொந்தப் படத்தின் பிரமோஷனுக்கே வராதவர் தியேட்டருக்கா வரப்போகிறார்? அஜித்தின் இந்த சின்ன விஷயத்தைக்கூட புரிந்து கொள்ளாத இவர்கள் எல்லாம் என்ன ரசிகர்கள்?

ஆனால் விஜய் ரசிகர்களின்...

யானைக்கும், குதிரைக்கும் இந்த வெளுத்தமுடி ரசிகர் நல்ல மாற்றாக இருந்தார். அஜித் மாதிரியே அவர் கை அசைக்க, ரசிகர்களும் அஜித்தை பார்த்த ஃபீலிங்கில் கோஷமிட, படம் தோற்றது போங்கள்.
FILE

இப்படியொரு ரசிகப் பட்டாளம் இருக்கும் வரைக்கும் அஜித்தும் சரி, விஜய்யும் சரி கவலைப்பட வேண்டியதேயில்லை. இன்னும் பத்து படத்தில் பல்லாலே துப்பாக்கி தோட்டாவை கவ்வி பிடிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்