மீரா ஜாஸ்மினுக்கு டும்... டும்

செவ்வாய், 31 டிசம்பர் 2013 (11:40 IST)
மாதவனுடன் ரன், விஷாலுடன் சண்டக்௦கோழி என தமிழ், மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றதோடு, ௧தேசிய விருது வாங்கியவ‌ர் நடிகை மீராஜாஸ்மின்.
FILE

அவருக்கு வரும் பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். சர்ச்சில் திருமாணம் நடக்க இருக்கிறது. துபாயில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை மணக்கிறார். இரு வீட்டார் சம்மதத்தோடு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது, மலையாளத்தில் ஜெயராமுடன் ஒண்ணும்மிண்டாதே ஆகிய படங்களை முடித்துக் கொடுக்கவுள்ளார். கல்யாணத்திற்கு தமிழ், மலையாள திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்