சினேகாவின் யாத்ரா

திங்கள், 27 ஜூலை 2009 (18:12 IST)
ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட் ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் அமையும். சினிமா கே‌ரிய‌ரில் அப்படியொரு பாக்கியம் கிடைக்காமலே போன நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனானப்பட்ட சிம்ரனுக்கே அப்படியொரு யோகம் கிடைக்கவில்லை.

சினேகா அதிர்ஷ்டசாலி. புன்னகை இளவரசி என பெயரெடுத்தவரை புயலாக உருமாற்றியிருக்கிறது பவானி படம். வைஜெயந்தி ஐபிஎஸ்-ன் ‌‌ரீமேக்கான பவானியில் சினேகா ஆ‌க்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தின் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே இவர்தான்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஆர்.விஜய் இயக்கும் யாத்ரா படத்தில் நடிக்கிறார் சினேகா. இதுவும் ஹீரோயின் ஓ‌ரியண்ட் சப்ஜெக்ட். அடுத்தடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் சக நடிகைகளின் வயிற்றில் பற்றி எ‌ரிகிறது பொறாமை நெருப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்