நியூஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!

செவ்வாய், 16 ஜூன் 2009 (21:24 IST)
20-20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றுப் போட்டியில், நியூஸிலாந்து அணியை அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை அணி.

வெற்றி பெற்றால்தால் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையில் நியூஸி. அணியும், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ரன் சராசரியில் நியூஸி. அணியை விட குறைவாக இலங்கை அணி இருந்ததால், தானும் வெற்றி பெற்றால்தா‌ன் அரையிறுதி என்ற நிலையிலும் இலங்கை-நியூஸி. அணிகள் இன்று மோதின.

பூவா-தலையா வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூ‌ர்யரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது நியூஸி. அணிக்கு உத்வேகமாக இருந்தது. இருந்தாலும், தில்ஷான் (48), சங்கக்காரா (35), ஜெயவர்தனே (41 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.

எட்டக்கூடிய இலக்குதான் என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் மெக்கல்லமும், ரெட்மாண்டும் சிறப்பாகத் துவங்கினர். 2 ஓவர்களில் 26 ரன்களை விளாசினர்.

ஆனால், 3வது ஓவர் முதல் அவர்களுக்கு ஆரம்பித்தது கெட்ட காலம். மெக்கல்லம் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 5வது ஓவரில் ரெட்மாண்ட் (23) ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு குப்டில் (43) தவிர, டெய்லர் (8), ஸ்டைரிஸ் (2), ஓரம் (7) என எவரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை.

இறுதியாக, 17 ஓவர்களில் நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இலங்கையின் பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 3 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உடானா 2 விக்கெட்டுகளையும், ஜெயசூர்யா, மலிங்கா, முரளிதரன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆ‌ட்நாயகனாஅஜ‌ந்தமெ‌ண்டி‌ஸதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

மிகவும் ஆவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆட்டம், இலங்கை அணியின் அபார பந்து வீச்சால் சப்பென்று முடிந்தது ர‌சிக‌ர்களு‌க்கு ஏமா‌ற்றமாக இரு‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்