மகளிர் 20-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: நியூஸீ.- 85/10
ஞாயிறு, 21 ஜூன் 2009 (16:53 IST)
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் மகளிருக்கான இருபது-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸீலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களில் சுருண்டது.
இப்போட்டியில் பூவா-தலையா வென்ற இங்கிலாந்து மகளிரணி, முதலில் நியூஸீலாந்தை பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பேட்ஸ், டோலன் களமிறங்கினர். இதில் பேட்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார்.
முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அணித்தலைவி வாட்கின்ஸ் 2 ரன்னில் அவுட் ஆனார். இதனால் 10 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நியூஸீலாந்து தடுமாறியது.
அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நியூஸீலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன் மட்டுமே எடுத்தது. சட்டெர்த்வெய்டி அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார்.
வெற்றி பெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 4.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.