தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பா‌கி‌‌ஸ்தா‌ன்

செவ்வாய், 11 மே 2010 (09:36 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத‌னமூல‌மஅரை‌யிறு‌தி வா‌ய்‌ப்பபா‌கி‌ஸ்தா‌னஉறு‌தி‌ப்படு‌த்‌தி‌ககொ‌ண்டது.

நே‌ற்‌றிரவநடந்த சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூ‌ஸீலாந்து அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது.

தென் ஆப்ரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் நியூ‌ஸீலாந்தை வென்றது. 2வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடை‌ந்தது.

பூவதலையவெ‌ன்பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கம்ரன் அக்மல், சல்மான்பட் ஆகியோர் களம் இறங்கினர். சல்மான் பட் 2 ரன் எடுத்த நிலையில் ஸ்டெயின் பந்து வீச்சில் ‌ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் இறங்கிய ஹாலித் லத்தீப் 7 ரன்னிலும், முகமது ஹபீஸ் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 5 ஓவர்களில் 18 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர் கம்ரன் அக்மல் 33 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன் எடுத்தார்.

5வது விக்கெட் ஜோடியான உமர் அக்மல், அப்ரிடி ஆகியோர் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்ரிடி 18 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்னும், உமர் அக்மல் 33 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. அப்துல் ரசாக் 11 ரன்னுடனும், அப்துர் ரஹ்மான் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லாங்வெல்ட் 4 விக்கெட்டும், ஸ்டெயின், காலிஸ், வான்டர்மெர்வ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 149 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்ரிக்க அணி, பாகிஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழந்த வண்ணம் இருந்தது. 4வது வீரராக களம் கண்ட டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 41 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 53 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் சயீத் அஜ்மல் 4 விக்கெட்டும், அப்துர் ரஹ்மான் 2 விக்கெட்டும், அப்துல் ரசாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை தனது கடைசி ஆட்டத்தில் தோற்கடித்ததா‌லரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு செ‌ன்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்