ஐ.பி.எல். களைப்பே தோல்விக்கு காரணம் - கேரி கர்ஸ்டன்
ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சூப்பர்- 8 சுற்றிலேயே இந்தியா வெளியேறியதற்குக் காரணம் ஓரளவிற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஏற்படுத்திய களைப்பும் சோர்வும்தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களுக்கு ஏற்பட்ட சிறு சிறு காயங்களும் உலகக் கோப்பை வந்த பிறகு வீரர்களிடந்தில் தீவிரத் தன்மையை குறைத்துள்ளது என்று கேரி கர்ஸ்டன் தோல்வி குறித்து தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
"மற்ற காரணங்களுடன் கூடவே களைப்பு என்பதும் ஒரு காரணிதான், இருப்பினும் அதனை நான் தோல்விக்கு அதனை ஒரு சாக்காக கூறவில்லை, ஆனால் அதுவும் ஒரு காரணைதான். நியூஸீலாந்தில் இருந்த போது இருந் ஆற்றல் அணி வீரர்களிடம் இந்த உலகக் கோப்பையின் போது இல்லை" என்று கூறிய கேரி கர்ஸ்டன் இதை இந்தியா தோற்றவுடன் ஒரு காரணமாகக் கூறவில்லை.
அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பலமுறை ஐ.பி.எல்.கிரிக்கெட் ஏற்படுத்தும் களைப்பையும் சோர்வையும் சுட்டிக்காட்ட அவர் தயங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மே மாதம் 24 ஆம் தேதி ஐ.பி.எல். முடிந்தவுடன் உடனடியாக இங்கிலாந்திற்கு ஜூன் ஒன்றாம் தேதி இந்திய அணி வந்தது. விரேந்திர சேவாகும், ஜாகீர் கானும் காயம் அடைந்த நிலையில்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் முதலே இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியான பயணங்கள், பயிற்சிகள், கிரிக்கெட் ஆட்டங்கள் என்று இருந்து வந்துள்ளனர். இதனால் இங்கிலாந்து வரும்போதே இந்த அணி ஒரு சோர்வடைந்த அணியாகத்தன் வந்தது என்று கேறி கர்ஸ்டன் கூறியுள்ளார்.
வீரர்கள் காயம், மற்றும் சோர்வு காரணமாக சர்வதேச 20- 20 கிரிக்கெட் ஆட்டத்திற்குத் தேவையான தீவிர பயிற்சி என்பது வீரர்களின் தெரிவாகவே அமைந்து விட்டது என்று கூறிய கேரி கர்ஸ்டன், ஒரு போட்டிக்கும் இன்னொரு போட்டிக்கும் ஒரு நாள் இடைவெளியில்லையெனில் வீரர்கள் வலைப்பயிற்சி செய்ய முடியவில்லை. ஏனெனில் தீவிர பயிற்சிய் அவசியமா அல்லது வீரர்களுக்கு ஓய்வு அவசியமா என்ற இரண்டு முக்கியமான விஷயங்களை தீர்மானிக்க வேண்டியிருக்கிறது என்றார்.
"ஆஸ்ட்ரேலிய தொடரை எடுத்துக் கொண்டால் எங்களுக்கு 17 நாட்கள் அணியை சகல விதத்திலும் தயார் செய்ய அவகாசம் இருந்தது. அதன் பிறகு 7 மாத காலங்களுக்கு இந்திய அணி நம்ப முடியாத அளவிற்கு சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த்கியது. ஆனால் இந்த முறை வீரர்கள் இரண்டு நாட்களுக்கு வீட்டுக்கு செல்ல நேர்ந்தது, அதன் பிறகு உலகக் கோப்பைக்கு வரும்போது வீரர்களிடையே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் எங்களின் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை, அதற்கான பழியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்".
இவ்வாறு கூறிய கர்ஸ்டன் இது போன்ற மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்கள் இருக்கும் போது கிளப் மட்ட கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடரில் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டும் என்றார்.
அடுத்ததாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 ஒரு நாள் சர்வதேச போட்டிகளை விளையாடவுள்ளது இந்தியா. இந்த தொடர் பற்றி கூறுகையில், இப்போது அந்த தொடருக்கு தயார் செய்துகொள்ள போதிய கால அவகாசம் உள்ளது என்றார் கர்ஸ்டன்.