இலங்கை அணிக்கு அபராதம்

சனி, 20 ஜூன் 2009 (12:32 IST)
நேற்று நடைபெற்ற ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை அரையிற்திப் போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய அணியை எதிர்த்து விளையாடும்போது இலங்கை அணி ஓவர்களை மெதுவாக வீசியது என்பதற்காக அபராதம் விதிக்க பணிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் 17.5 ஓவர்களில் 101 ரனகளுக்கு சுருண்டாலும், குறித்த நேர இலக்கில் இலங்கை அணி ஒரு ஓவரை குறைவாக வீசியது என்று ஆட்ட நடுவர் ஹர்ஸ்ட் அபாராதம் விதித்துள்ளார்.

இதனால் வீரர்கள் ஆட்டத்தொகையில் 5 சதவீதமும் கேப்டனுக்கு இரட்டிப்பு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்