இந்திய ரசிகர்களிடம் தோனி மன்னிப்பு

திங்கள், 15 ஜூன் 2009 (11:53 IST)
ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் சூப்பர்- 8 சுற்றில் தோல்வி தழுவி வெளியேறியதையடுத்து இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் உலகக் கோப்பைக்கு முன் அதிக கிரிக்கெட் போட்டிகளை விளையாடியதுதான் காரணம் என்பதை தோனி மறுத்தார்.

"என்ன நடந்ததோ அது குறித்து வருந்துகிறோம், ஆனால் சிறந்த விளையாட்டையே வெளிப்படுத்தினோம்" என்றார் தோனி.

"னெருக்கடியை சமாளிக்கும் அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருக்கின்றனர், ஆனால் இந்த நாளில் எந்த ஒரு முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்தியா ஒரு உணர்ச்சிபூர்வமான நாடு, இதனால் ரசிகர்களைக் காட்டிலும் எங்களுக்கு அதிக ஏமாற்றமாக இருக்கிறது." என்ற தோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடியதுதான் மனச்சோர்வை ஏற்படுத்தியது என்ற செய்தியாளர்களின் தொணதோணப்பை முற்றிலும் மறுத்தார்.

எந்த ஒரு வீரரோ அல்லது நானோ 100 சதவீதம் பங்களிப்பு செய்யவில்லை என்று கூறினால் நாந்தான் அதற்குப் பொறுப்பு, ஆனால் ஒரு அணியாக நாங்கள் திறமையை வெளிப்படுத்தவில்லை.

ஆனால் தன்னுடைய சொந்த பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த தோனி, அது ஏமாற்றம் அளிப்பதாகவே இருக்கிறது என்று ஒப்புக் கொண்டார் : நான் அனாயசமாக பவுண்டரிகளுக்கு வெளியே அடிக்க முடிவதில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன், நான் இதில் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன், இதனால் மீண்டும் சிக்சர்கள் பாதைக்கு திரும்புவேன்" என்றார் தோனி.

தனது அணியின் தோல்வி குறித்து ஏமாற்றம் வெளியிட்டாலும், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு விதம் குறித்து தோனி பாராட்ட தவறவில்லை.

இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக வீசியதுடன் பவுன்சர் பந்துகளை அவர்கள் நன்றாக வீசினாஅர்கள் என்றார்.

தோல்வி கண்டு துவளும் மனப்போக்கு இந்த அணியிடம் இல்லை என்று கூறிய தோனி, விரைவில் தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்ததாக உள்ள மேற்கிந்திய ஒரு நாள் தொடரில் வெற்றிப்பாதைக்கு மீண்டும் திரும்புவோம் என்று தோனி உறுதியளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்