அரையிறுதியில் இந்திய மகளிர் தோல்வி

வியாழன், 18 ஜூன் 2009 (20:30 IST)
இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் 20- 20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூஸீலாந்து மகளிர் அணி எடுத்த 145/5-ற்கு எதிராக இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

146 ரன்கள் என்ற கடின இலக்கை எதிர் கொண்டு களமிறங்கிய இந்திய மகளிர் அணி நியூஸீலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சிலும், அபாரமான ஃபீல்டிங்கினாலும் ரன்கள் எடுக்க திணறியதோடு விக்கெட்டுகளை சரமாரியாக இழந்தது.

இந்திய அணியில் மிதிலா ராஜ் 20 ரன்களையும், ஷர்மா 24 ரன்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

நாளை மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து மகளிர் அணியும் ஆஸ்ட்ரேலிய மகளிர் அணியும் மோதுகின்றன.


வெப்துனியாவைப் படிக்கவும்