சென்னையில் ஒரே வாரத்தில் 900 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையம், சென்ட்ரல் இரயில் நிலையம், எழும்பூர் இரயில் நிலையங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வரட்டு இருமல், சலி, தொண்டை வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்படி ஒரு வாரத்தில் 900 பேருக்கு பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 15 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.