இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 116 பேர் பலி

சனி, 5 செப்டம்பர் 2009 (13:32 IST)
இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

உலகையை அச்சுறுத்தி வரும் பன்றிக் காய்ச்சல் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புனே, மும்பை, அகமதாபாத், பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் பன்றிக் காய்ச்சலுக்கு நேற்றும் 4 பேர் பலியாகினர். இதனால் அந்த மாநிலத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் நேற்று ஒருவர் பலியானார். இதன் மூலம் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மேலும் 33 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இம்மாநிலத்தில் மட்டும் 1,759 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்