வெள்ளி, 8 மே 2009 (15:00 IST)
தேவையான பொருட்கள்
சீஸ் - 500 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
ஏலக்காய் - 5
பன்னீர் - 4 தேக்கரண்டி
செய்யும் முறை
சீஸை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சீஸை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இட்லித் தட்டில் பரப்பி ஆவியில் இந்த உருண்டைகளை நன்கு வேக வைத்து வெளியே எடுத்து ஆற வைக்கவும்.
பிறகு சர்க்கரையைப் பாகு காய்ச்சி, அதில் ஏலப்பொடியை சேர்க்கவும்.
சர்க்கரைப் பாகில் சீஸ் உருண்டைகளைப் போட்டு ஊற விட்டு பரிமாறவும்.