ரொட்டி அல்வா

வியாழன், 6 ஆகஸ்ட் 2009 (14:59 IST)
ரொட்டி மீந்துவிட்டதா? அதை வீணாக்காமல் ரொட்டி அல்வாவாக செய்து சாப்பிடுங்கள். இதோ உங்களுக்கான செய்முறை...

என்ன தேவை?

இனிப்பு ரொட்டி - 1/2 கிலோ
நெய் - 1 கிலோ
சர்க்கரை - 3/4 கிலோ
முந்திரி - 50 கிராம்

எப்படி செய்வது?

வாணலியில் நெய் விட்டு அதில் முந்தி, திராட்சை போட்டு வறுக்கவும்.

பின்பு ரொட்டி துண்டுகளை சேர்க்கவும்.

ரொட்டி பொன்னிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

அல்வா நன்றாக திரண்டு, நெய் வாசனை வரும் போது இறக்கிவிடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்