ரவை பர்பி

திங்கள், 10 மே 2010 (15:59 IST)
தேவையானவ

வறுத்த ரவை - 1 க‌ப்
நெய் - 1 க‌ப்
ஏலக்காய் - சிறிதளவு
மு‌ந்‌தி‌ரி - ஒரு கை‌ப்‌பிடி
சர்க்கரை - 3 க‌ப்
பால் - அரை ‌லி‌ட்ட‌ர்

செ‌ய்யு‌ம் முறை

வாண‌லி‌யி‌ல் பாலை ஊ‌ற்‌றி அ‌தி‌ல் ச‌ர்‌க்கரையை‌க் கொ‌ட்டி ‌கிள‌றவு‌ம்.

ச‌ர்‌க்கரை‌க் கரை‌ந்தது‌ம் வறு‌த்த ரவைய‌ை‌க் கொ‌ட்டி ‌கிளறவு‌ம்.

ரவை வெ‌ந்து வரு‌ம் போது நெய், ஏலக்காய் பொடி, வறு‌த்த மு‌ந்‌தி‌ரி சேர்த்து மைசூர்பாகு பதத்தில் கிளறி இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் ஊற்றி ஒன்று போல் பரப்பி வில்லைகளாக போடவும்.

ரவை பர்பி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்