ரசமலாய்

திங்கள், 22 ஜூன் 2009 (15:40 IST)
இ‌ப்படியு‌ம் செ‌ய்யலா‌ம்

தேவையான பொருட்கள்:

பால் பவுடர் - 4கப்
முட்டை - 2 கப்
ஏலக்காய் பவுடர் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
பால் - 1 கப்
சக்கரை - 1/4 கப்
சமையல் சோடா - 1 தே‌க்கர‌ண்டி
பன்னீர் - 2 மேஜை‌க் கர‌ண்டி

செய்முறை:

பால் பவுடர், சமையல் சோடா, முட்டை முதலியவைகளை நன்றாக ‌மிருதுவான மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

பிசைந்த உருண்டைகளை தட்டையாக்கி வைத்துக் கொள்ளவும். பாலை நன்றாக காய்ச்சவும்.

காய்ச்சிய பாலுடன் சக்கரை சேர்த்து 10 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

தட்டையாக்கியுள்ள மாவை கொதிக்கும் பாலில் போட்டு வேக வைக்கவும்.

பாலில் வெந்த மாவு, இரண்டு மடங்காக உப்பியவுடன், அவைகளை ஓரிரு முறை திருப்பி விடவும்.
5 நிமிடம் வெந்தவுடன் இறக்கவும்.

இறக்கியவுடன் ஏலக்காய் பவுடர், பன்னீர் முதலியவைகளை சேர்க்கவும்.

நன்கு ஆறியவுடன் ரோஜா இதழ்கள் மற்றும் வெள்ளி தாள்களினால் அலங்கரிக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்