மாலாடு

Webdunia

வியாழன், 21 ஜூன் 2007 (11:58 IST)
மலாடு செய்முறை விளக்கம்.

தேவையான பொருட்கள

பயற்றம் பருப்பு 1 கப்
உளுத்தம் பருப்பு 1/2 கப்
சக்கரை 1 கப்
ஏலம் 3 (பொடித்துக் கொள்ளவும்)
நெய் 4 ஸ்பூன்
முந்திரி 6 (வறுத்தது)
சுக்குப் பொடி 1/2 ஸ்பூன்

செய்முற

1 . பயற்றம் பருப்பு, உளுத்தம் பருப்பு, இரண்டையும் சிவக்க வறுத்துக
கொள்ளவும

2. சக்கரையையும் பொடித்துக் கொள்ளவும

3. வறுத்த பருப்புகளை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4. அரைத்த பருப்புகள், சக்கரைத் தூள், முந்திரி, சுக்கு, ஏலப்பொடி
முதலியவைகளில்நெய் விட்டுக் கொள்ளவும்.

5. அனைத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளா
பிடித்துக்கொள்ளவும். மாலாடு தயார்.

<http://www.webulagam.com/cookery/tiffan/2000_10/13_barbi.htm>

முந்திரி பர்பி

தேவையான பொருட்கள்

மில்க்மெய்ட் - ½ டின்

முந்திரி பருப்பு - 25 கிராம்

டெய்ரி மில்க் சாக்லேட் - ½


செய்முறை

மில்க் மெய்ட் டின்னை அறுத்து, பாதி மில்க் மெய்ட்டை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரி பருப்பை பச்சையாக மிக்ஸியில் பொடி செய்யவும்.

வாணலியில் மில்க் மெய்ட் பால் விட்டு முந்திரி பொடியை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். வாணலி ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

தாம்பாளத்தில் நெய் தடவி, அதில் கிளறிய மில்க்மெய்ட், முந்திரி கலவை ஊற்றவும். ஆறிய பின் துண்டுகளாக போடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்