செவ்வாய், 1 ஜூன் 2010 (15:46 IST)
தேவையானவை
பச்சரிசி - 100 கிராம்
உளுந்து - 75 கிராம்
பால் - 200 கிராம்
தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்யும் முறை
பாலைக் காய்ச்சி, இறக்குகிற சமயத்தில் தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கவும். அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மைய அரைக்கவும்.
இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இட்லி குண்டானில் ஒரு தட்டை மட்டும் வைத்து அதில் வெள்ளைத் துணியைப் போட்டு உருட்டிய உருண்டைகளை வைத்து ஆவி கட்டி இறக்கவும்.
ஆவியில் வெந்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடவும்.
சுவையான பால் பணியாரம் தயார்.