வெள்ளி, 16 அக்டோபர் 2009 (10:54 IST)
தேவையானவை
பாதாம் பருப்பு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - கால் கப்
ஏலக்காய் தூள் - 3
குங்குமப் பூ - சிறிது
செய்யும் முறை
பாதாம் பருப்பை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு மிக்சியில் போட்டு ரவை ரவையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த விழுதையும், சர்க்கரையையும் போட்டு மிதான தீயில் கிளறிக் கொண்டிருக்கவும்.
சர்க்கரை கரையும் போது நீர்த்துப் போகும் அல்வா, பின்னர் சிறிது நேரத்தில் கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
அந்தப் பதத்தில் வாணலியை இறக்கி, அதில் நெய், குங்குமப் பூ, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
சிறிது நெய் தடவிய கிண்ணத்தில் அல்வாவைக் கொட்டி அலங்கரிக்கவும். இது வெண்மையான நிறத்தில் இருக்கும்.
பிடித்தவர்கள் சேகரிப் பவுடர் சேர்த்து நிறமூட்டிக் கொள்ளலாம், பிடித்த எசன்ஸ் சேர்த்து மணமூட்டிக் கொள்ளலாம்.