பழ‌ச்சாறு

வெள்ளி, 5 மார்ச் 2010 (17:13 IST)
தேவையான பொருட்கள்:

ஸ்டிராபெரி - 1 க‌ப்
ஆரஞ்சு பழ‌ம் - 1 க‌ப்
அன்னாசிப்பழ துண்டு - 1 க‌ப்
வாழைப்பழம் - 1
வெ‌ன்‌னிலா அ‌ல்லது ஸ்டிராபெரி எஸன்ஸ் - 1 தே‌க்கர‌ண்டி
தயிர் - அரை க‌ப்
ச‌ர்‌க்கரை - 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

அனைத்து பழங்களையும் தோ‌ல் ம‌ற்று‌ம் கொ‌ட்டை ‌நீ‌க்‌கி ‌ஜா‌ரி‌ல் போ‌ட்டு அ‌த்துட‌ன் ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து அரைக்கவும்.

அதனுடன் எஸ‌ன்‌ஸ் ம‌ற்று‌ம் தயிரையும் சேர்த்து மிக்ஸரில் ஒரு சுற்று சுற்றவும்.

ஐஸ் துண்டுகள் சேர்த்தவுடன் பழ‌ச்சாறு தயா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்