பயறு பாயசம்

வியாழன், 10 செப்டம்பர் 2009 (15:40 IST)
பச்சைப் பருப்பு பாயசம் செய்வதும் எளிது, குழந்தகைளுக்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

தேவையானவை

பச்சைப் பருப்பு - கால் கிலோ
வெல்லம் - கால் கிலோ
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1 கப்
நெய் - அரை கப்
முந்திரி, ஏலக்காய் - தேவையான அளவு

செய்யும் முறை

webdunia photo
WD
வெறு‌ம் வாண‌லி‌யி‌ல் ப‌ச்சை‌ப் பரு‌ப்பை‌ப் போ‌ட்டு ந‌ன்கு வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பி‌ன்ன‌ர் ஒரு பாத்திரத்தில் பச்சைப் பருப்பை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

பச்சைப் பருப்பு நன்கு வெந்ததும் ஏலக்காயையும், வெல்லத்தைப் பொடியாக்கிப் போட்டுக் கிளறவும்.

webdunia photo
WD
ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே வாணலியில் நறுக்கிய தேங்காயையும் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பச்சைப் பருப்பு பாயாசம் தயாரானதும், இறக்கி அதனுடன் வறுத்த தேங்காய் மற்றும் முந்திரியைச் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு - வெல்லம் ருசிக்கேற்ற அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்