தக்காளி சாஸ்

திங்கள், 14 டிசம்பர் 2009 (14:02 IST)
தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/4 கிலோ
சர்க்கரை - 1/4 அழாக்கு
மிளகாய்த் தூள் - 1/2 தே‌க்கர‌ண்டி
சோடியம் பென்சோயேட் - 1 சிட்டிகை (பிரிசர்வேட்டிவ்)

செய்முறை:

தக்காளியை வேகவைத்து மிக்ஸியிலிட்டு மசித்துக் கொள்ளுங்கள்.

மசித்த தக்காளியை ஒரு பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரை, மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.

இந்தக் கலவை நன்கு கொதித்து `சாஸ்' பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்குங்கள்.

இதை ஆறவிட்டு சோடியம் பென்சோயேட் சேர்த்து கிளறி பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்துங்கள்.

குழந்தைகள் மிக விரும்பும் ஐட்டம். வீட்டிலேயே செய்தால் செலவு மிச்சம். ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்