அவ‌ல் கேக‌ரி

வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (15:19 IST)
தேவையானவை

அவ‌ல் - 1 க‌‌ப்
நெ‌ய் - அரை க‌ப்
வறு‌த்த மு‌ந்‌தி‌ரி - ‌சி‌றிது
ப‌ச்ச‌ை‌க் க‌ற்பூர‌ம் - ‌சி‌றிது
ச‌ர்‌க்கரை - 1 க‌ப்
உல‌ர்‌ந்த ‌திரா‌ட்சை - ‌1 தே‌க்கர‌ண்டி
கேச‌ரி‌ப் பவுட‌ர் - 2 ‌சி‌ட்டிகை
ஏல‌க்கா‌ய் பொடி - 3 ‌சி‌ட்டிகை

செ‌ய்யு‌ம் முறை

அவலை வாண‌லி‌யி‌ல் கொ‌ட்டி வறு‌த்து, ஆற‌வி‌ட்டு ரவை போல பொடி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் 2 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் ச‌‌ர்‌க்கரை ம‌ற்று‌ம் கேச‌ரி‌ப் பவுட‌ர் சே‌ர்‌த்து கொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

கொ‌தி வ‌ந்தது‌ம், அவலை ந‌ன்கு‌க் ‌கிள‌றி‌க் கொ‌ண்டே கொ‌ட்டவு‌ம்.

ந‌ன்கு ‌கிள‌றி ‌வி‌‌ட்டு ஓர‌த்‌தி‌ல் நெ‌ய்யை ஊ‌ற்றவு‌ம்.

அதனுட‌ன் ப‌ச்சை‌க் க‌ற்பூர‌ம், மு‌ந்‌தி‌ரி, ‌‌திரா‌ட்சை, ஏல‌ப்பொடி ஆ‌கியவ‌ற்றை சே‌ர்‌த்து‌க் ‌கிளறவு‌ம்.

சுவையான அவ‌ல் கேச‌ரி‌ தயா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்