ஒரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டுச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் வாணலியைக் கழுவி அதிலேயே வெல்லக் கரைசலைக் கொட்டி, பாகுவரும்வரை கிளறவும்.
இளம் உருண்டைப் பாகு வரும்போது தேங்காய்த் துறுவல், துவரம் பருப்பு சேர்த்து கலந்து விட்டு பிசறிய அவல் பொடியைச் சேர்க்கவும்.