செய்முறை:
ஓட்ஸ், தேங்காய் தனி தனியாக லேசாக பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்க்கவும். முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும். அத்துடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்க்கவும். ஒரு சேர பிரட்டி கலந்து ஆற வைக்கவும்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த சர்க்கரை பாகில் பொடித்த ஓட்ஸ், நட்ஸ், டேட்ஸ் மிக்ஸ் சேர்க்கவும். பிரட்டி விட்டு நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். ஓட்ஸ் லட்டு தயார். மணமாகவும், சுவை சூப்பராகவும் இருக்கும்.