சூப்பரான சுவையில் சேமியா கேசரி செய்ய !!

வெள்ளி, 3 டிசம்பர் 2021 (17:37 IST)
தேவையான பொருட்கள்:
 
சேமியா - 500 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
தண்ணீர் - 400 மி.லி.
நெய் - தேவையான அளவு
முந்திரி பருப்பு - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை:
 
* சேமியா, முந்திரிப்பருப்பு, திராட்சையை தனித்தனியாக நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சிறிது சிறிதாக சேமியா போட்டு கிளறி வேகவிடவும். கட்டி விழாமல் இருக்க கைவிடாமல் கிளற வேண்டும்.
 
* சேமியா வெந்ததும் சர்க்கரை, கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் போது கடைசியாக முந்திரிபருப்பு, திராட்சை, மீதியுள்ள நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
 
* பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும். சுவையான சேமியா கேசரி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்